India
ATM எந்திரத்தையே களவாடிய கும்பல்.. cctv கேமராவையும் திருடியதால் கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் சிக்கல்!
ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம் மையம் ஒன்று உள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் அங்கு வந்துள்ளனர்.
இவர்கள் ஏ.டி.எம் எந்திரத்தில் இருக்கும் பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் அது முடியவில்லை. இதனால் ஏ.டி.எம் எந்திரத்தையே அந்த கும்பல் தூக்கிச் சென்றுள்ளது. மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி கேமராக்களையும்யும், பதிவுகளையும் அவர்கள் கையோடு எடுத்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து காவல்நிலையத்தில் வங்கி நிர்வாகம் புகார் கொடுத்துள்ளது. இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருடப்பட்ட ஏ.டி.எம் எந்திரத்தில் ரூ.25 லட்சம் பணம் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
அதேபோல் சி.சி.டி.வி கேமராக்ளை திருடர்கள் எடுத்துச் சென்றதால் அவர்களை அடையாளம் காண்பதில் போலிஸாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஏ.டி.எம் இருந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!
-
“CBSE பள்ளிகளுக்கு NOC சான்றிதழ்.. சட்டம் தெரியுமா? தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கூறும் பொய்!”
-
உணவுக்குப் பதில் பிஸ்கட் : காலை உணவு திட்டத்தில் அலட்சியம் காட்டும் த.வெ.க அரசு!
-
“நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!