India
இதயத்தில் அடைப்பு.. வளர்ப்பு நாயின் உயிரை காப்பாற்றிய உரிமையாளர்: நெகிழ்ச்சி சம்பவத்தின் பின்னணி!
மும்பையைச் சேர்ந்தவர் பிரத் திவாரி. அவர் தனது வீட்டில் ரோனி என்ற நாயை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த நாய் சில நாட்களாக அடிக்கடி மயங்கி, மயங்கி விழுந்துள்ளது.
இதனால் நாயை கால்நடை மருத்துவமனைக்குக் கூட்டிவந்து சிகிச்சையில் சேர்த்துள்ளார். அப்போது நாயை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது இதயத்தில் அடைப்பு இருந்தது தெரிந்தது.
உடனே நாய்க்கு அறுவை சிகிச்சை செய்து பேஸ்மேக்கர் பொருத்தினால் மட்டுமே உயிர் பிழைக்கும் இல்லை என்றால் நாயை சில நாட்களிலேயே உயிரிழந்துவிடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
நாய்தானே என திவாரி விட்டுவிடாமல் அறுவை சிகிச்சைக்கு அனுமதி கொடுத்துள்ளார். உடனே நாய்க்கு அறுவை சிகிச்சை செய்து வெற்றி கரமாக பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது நாய் திவாரி வீட்டில் தொடர் சிகிச்சையிலிருந்து வருகிறது. சாதாரண நாய்தானே என விட்டு விடாமல் நாயின் உயிரை காப்பாற்றிய உரிமையாளருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!