India
வீடியோ எடுத்து மிரட்டல்.. சிறுமியை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் : அசாமில் அதிர்ச்சி!
அசாம் மாநிலம், கவுகாத்தி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் கடந்த மாதம் 15ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும் அந்த இளைஞர் அதை வீடியோ எடுத்து, இதுகுறித்து வெளியே யாரிடமாவது கூறினால் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் சிறுமி இதுகுறித்து யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.
இதையடுத்து அந்த வாலிபர்கள் மீண்டும் கடந்த 19ஆம் தேதி சிறுமியை ஓட்டலுக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது இரண்டு பேருடன் மற்றொரு வாலிபரும் சேர்ந்துகொண்டு கூட்டாக அந்தச் சிறுமியை வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர் சிறுமிக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தொடர்ந்து வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதால் நடந்தவற்றைச் சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து சிறுமி கூறிய அடையாளங்களைக் கொண்டு அந்த மூன்று வாலிபர்களையும் போலிஸார் தேடிவருகின்றனர். மேலும் சிறுமிக்கு மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
Also Read
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!