இந்தியா

7 பேர் பலி.. 60 குடிசைகள் எரிந்து நாசம்: நள்ளிரவு டெல்லியை உலுக்கிய கொடூர சம்பவம்!

டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7 பேர் பலி.. 60 குடிசைகள் எரிந்து நாசம்: நள்ளிரவு டெல்லியை உலுக்கிய கொடூர சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லியின் கோகுல்புரி பகுதியில் உள்ள குடியிருப்பில் இன்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பகுதியிலிருந்த அனைவரும் தூக்கிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளதால் பலர் தீயில் சிக்கியுள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்களும், போலிஸாரும் சம்பவ இடத்திற்கு வந்து 13 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். பின்னர், தீயில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் அடையாளம் தெரியாத வகையில் 7 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இந்த உடல் முற்றிலுமாக எரிந்து உள்ளதால் யார் இறந்தது என அடையாளம் காண்பதில் போலிஸாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தில் 60க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது. இந்த பயங்கர தீ விபத்திற்கான காரணம் குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கள் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ. 1 கோ நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories