India
முன்னாள் முதலமைச்சரை தோற்கடித்த ‘குழந்தை’ - கோவாவில் நடந்தது என்ன?
கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரை ஆம் ஆத்மி வேட்பாளரான கார் மெக்கானிக்கின் மகன் தோற்கடித்துள்ளார்.
கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பெனவுலிம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் சர்ச்சில் அலமாவ் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளரான கார் மெக்கானிக் மகன் வென்ஸி வீகாஸ் வெற்றி பெற்றார்.
பெனவுலிம் தொகுதியில் ஐந்து முறை எம்.எல்.ஏவாக இருந்த சர்ச்சில், கோவாவில் காங்கிரஸ் ஆட்சியில் சில நாட்கள் முதலமைச்சராக இருந்தவர். இந்த முறை தேர்தலுக்கு முன்பாக சர்ச்சில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அவர் மீண்டும் அதே பெனவுலிம் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போது தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வென்ஸி வீகாஸை, “அவன் ஒரு குழந்தை” என விமர்சித்திருந்தார் சர்ச்சில்.
முன்னாள் முதலமைச்சரால் குழந்தை என விமர்சிக்கப்பட்டவர்தான் தற்போது அவரையே 1,271 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிவாகை சூடியுள்ளார்.
சர்ச்சிலை தோற்கடித்த ஆம் ஆத்மியின் வென்ஸி பிரபலமடைந்துள்ளார். கோவாவில் ஆம் ஆத்மி கட்சி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!