India

LOOPல் பாட்டு போட்டதால் ஆத்திரம்: சமாதானம் செய்ய முற்பட்ட இளைஞன் அடித்துக்கொலை; உ.பியில் நடந்த பகீர்!

இந்தியாவில் வட மாநிலங்களில் திருமண நிகழ்ச்சியின் போது பாட்டு, கச்சேரி, நடனம் என பல கலை நிகழ்ச்சிகளை வைத்து கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம்.

ஆனால் அண்மை காலங்களாக அம்மாதிரியான திருமண கொண்டாட்டங்களின் போது பல அசம்பாவிதங்கள் நடைபெறுவதும் வழக்கமாகி வருகிறது.

அதன்படி, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்புர் கேரியில் நடந்த திருமணத்தின் போது பாட்டு போடுவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டிருக்கிறார்.

கமாரியா என்ற கிராமத்தில் கடந்த வெள்ளியன்று இரவு விவசாயி மகளின் திருமண நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த DJவிடம் ஒரே பாடலை மீண்டும் மீண்டும் ஒலிபரப்பச் சொல்லி விருந்தினர் ஒருவர் கேட்டிருக்கிறார்.

இது பிற விருந்தினர்களிடையே சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் சிலர் அதற்கு எதிர்ப்பும் தெரிவித்திருக்கிறார்கள். அப்போது இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.

அவர்களை சமாதானம் செய்ய முற்பட்ட வீரு லால் என்ற 23 வயது இளைஞன் அந்த தகராறின் போது கட்டையால் தாக்கப்பட்டிருக்கிறார். இதனால் சுயநினைவை இழந்து மயங்கிய அந்த இளைஞனை சிகிச்சைக்காக லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்திருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிஸார் மூன்று பேரை கைது செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Also Read: தாலி கட்டும் நேரத்தில் மயங்கி விழுந்த மணப்பெண்... காரணம் கேட்டு மாப்பிள்ளை 'ஷாக்'!