India
பெண் போலிஸார் முன் சட்டையைக் கழற்றி சேட்டை.. வாலிபருக்கு தக்கபாடம் புகட்டிய நீதிமன்றம்!
மும்பையைச் சேர்ந்தவர் கணேஷ் கார்வா. இவர் கடந்த 2016ம் ஆண்டு பாபு கார்வா என்பவருடன் சாலையில் தகராறு செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த போலிஸார் இருவரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.
அங்கு போலிஸாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் பெண் காவலர்கள் முன்பு சட்டையைக் கழற்றி அநாகரீகமாக நடந்து கொண்டார்.இதனால், காவல்நிலையத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதாகக் கூறி அவர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி எஸ்.ஆர்.நர்வாடே, காவல்நிலையத்தில் பெண் போலிஸார் முன்பு சட்டையைக் கழற்றி அநாகரீகமாக நடந்து கொண்ட கணேஷ் கார்வாவுக்கு 10 நாட்கள் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து போலிஸார் கணேஷ் கார்வாவை போலிஸார் சிறையில் அடைத்தனர்.
Also Read
-
வாக்களித்த மக்களுக்கு கைக்கொடுக்க இவ்வளவு தயக்கம் ஏன்? - முதலமைச்சரின் சர்ச்சை செயலுக்கு எழும் கண்டனம்!
-
அதிரடியாக ஜாகீர் கானை இறக்கிய சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் மைண்ட்.. இதுதான் ரகசியம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
-
உயிரைக் காக்கும் மருந்தா? விளம்பரத்திற்கு பயன்படும் மோதிரமா? : த.வெ.க.வை நோக்கி எழும் கேள்விகள்!
-
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 : தங்கத்தை தட்டித் தூக்கிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!
-
“எங்கப்பா காமராஜர் படம்?” : வெளிச்சத்திற்கு வந்த த.வெ.க அரசின் பித்தலாட்டம்!