India
ரூ.100க்காக சக ஊழியனை கட்டையால் அடித்துக் கொன்ற போதை ஆசாமி : மும்பையில் நடந்த பகீர் சம்பவம்!
ராஜஸ்தானை சேர்ந்த 35 வயதான அர்ஜுன் யஷ்வந்த் சிங் சர்ஹர் என்பவர் மும்பையில் உள்ள கிர்கவும் பகுதியில் கூலித்தொழிலாளியாக இருந்து வந்தார்.
அர்ஜுனுடன் பணியாற்றும் மனோஜ் மரஜ்கோலிடம் (36) 100 ரூபாய் கடனாக பெற்றிருந்தார். கடந்த வியாழக்கிழமை இரவன்று இருவரும் குடிபோதையில் இருந்தபோது 100 ரூபாயை திருப்பித் தருவது தொடர்பாக தகராறு ஏற்பட்டிருக்கிறது.
பின்னர் மாதவ் பவன் அருகே அர்ஜூன் தூங்கிக் கொண்டிருந்த போது சிமெண்ட் கட்டையால் அவரது மண்டையை அடித்திருக்கிறார் மனோஜ் மரஜ்கோல்.
இதில் அர்ஜூன் யஷ்வந்த் சிங் சர்ஹார் இறந்திருக்கிறார். இந்த சம்பவம் நேற்று அதிகாலை (பிப்.,05) நடந்திருக்கிறது. இதனையடுத்து அந்த இடத்தை விட்டு தப்பியோடிய மனோஜை அடுத்த 2 மணிநேரத்தில் வி.பி.சாலை போலிஸார் கைது செய்து எதிர்வரும் செவ்வாய் வரை போலிஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
100 ரூபாயை திருப்பிக் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருக்கும் சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read
-
த.வெ.க.வின் நாடகத்தால் நடைபெறும் இடைத்தேர்தல் - தக்க பாடம் புகட்டும் முனைப்பில் மக்கள்!
-
நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு; சமரசமின்றி போராடுவோம்: #BanNEET இயக்கத்திற்கு மு.க.ஸ்டாலின் அறைகூவல்!
-
#BANNEET என்னும் இலக்குடன் ‘கையெழுத்து இயக்கம்’ தொடக்கம்! - உயிர்க்கொல்லியை நீக்க மாபெரும் முன்னெடுப்பு!
-
ஏழைகளுக்காக ரூ.1 இட்லி... பாட்டி கமலாயிக்கு நிறுத்தப்பட்ட இலவச சிலிண்டர்: வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு?
-
சினிமாவை மிஞ்சிய தங்கக் கடத்தல் : சென்னை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன? சிக்கியது எப்படி?