India
பெற்ற மகளையே தன் இச்சைக்கு பலியாக்கிய தந்தை கைது; சூரத்தில் நடந்த பயங்கரத்தின் பின்னணி!
நேபாளத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தின் சூரத் நகரில் உள்ள சர்தானா பகுதியில் குடும்பத்துடன் குடியேறியிருக்கிறார். இவருக்கு 10 மற்றும் 7 வயது இரண்டு மகள்களும், 4 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர்.
பணிக்கு ஏதும் செல்லாமல் சுற்றித்திரிந்து வந்திருக்கிறார் 30 வயதான அந்த நபர். கொரோனா காரணமாக நேபாளம் சென்றவர் மீண்டும் சூரத்திற்கு திரும்பியிருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த வியாழனன்று தனது 7 வயது மகளையும், 4 வயது மகனையும் ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு 10 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். பின்னர் மற்ற குழந்தைகளிடம், நீளமான முடியுடன் கருப்பு சட்டை அணிந்தவர்தான் வீட்டுக்கு வந்ததாக அனைவரிடமும் கூற வேண்டும் எனவும் மிரட்டியிருக்கிறார்.
வன்கொடுமை செய்த அந்த தந்தையே தனது மகளை அனுப்பி அருகே குடியிருந்த பாட்டியை அழைத்து வரும்படி கூறியிருக்கிறார். அதன்படியே வந்த அந்த பாட்டி, மூத்த பேத்தி அந்தரங்க உறுப்பில் இருந்து ரத்த சொட்ட சொட்ட மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஸ்மிம்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் அப்போது பாலியல் குற்றவாளியான அந்த தந்தையும் மற்ற குழந்தைகளும் உடன் சென்றதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டிருக்கிறது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சையளித்த மருத்துவர் இந்த விவாகரம் குறித்து தகவல் தெரிவித்ததும் உடனே விரைந்து வந்த போலிஸார் உடனடியாக விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறார்கள்.
அப்போது வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் தம்பியும், தங்கையும் தங்களது தந்தை இவ்வாறு தெரிவிக்கும்படி கூறியதாக போலிஸிடம் கூறியிருக்கிறார்கள். அப்போது போலிஸிடம் தான் வேலைக்காக வெளியூர் சென்றதாக அந்த நபர் கூறியிருக்கிறார்.
இதனையடுத்து சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சிறுமியின் வீட்டுக்குள் அவரது தந்தையும், மைத்துனனும் சென்றிருக்கிறார்கள். அதன் பின்னர் மைத்துனன் மட்டும் வெளியே வந்திருக்கிறார்.
இதனால் சந்தேகமடைந்த போலிஸார் சிறுமியின் தந்தையிடம் விசாரித்ததும் உண்மையை கக்கியிருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!