India
கிரிக்கெட் விளையாடும் போது ஏற்பட்ட சண்டை.. பள்ளி மாணவர் அடித்துக் கொலை: தெலங்கானாவில் அதிர்ச்சி!
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் ஜூபிலி அல்ஸ் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் 10ம்வகுப்பு மாணவர்கள் கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.
அப்போது, திடீரென மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருவரை ஒருவர் மாறிக்தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் ஒரு மாணவன் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்துள்ளான்.
இது குறித்து அறிந்த போலிஸார் அங்கு வந்து, அந்த மாணவனின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் உயிரிழந்த மாணவன் சுபன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் விளையாடிய மாணவர்கள் மீது சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கிரிக்கெட்விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறில் பள்ளி மாணவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“த.வெ.க தூய சக்தி அல்ல; துயர சக்தி” : மதுராந்தகத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு!
-
“சட்டமன்றத்தில் முதலமைச்சர் இன்னும் Dance Fightதான் போடல” : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
-
“தோல்விப் பயத்தால் ரூ.10,000 கொடுக்கம் த.வெ.க” : தேர்தல் ஆணையத்தில் என்.ஆர்.இளங்கோ புகார் மனு!
-
“புதுச்சேரி - கொலைச்சேரி ; திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
-
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் : ஆடவர் டி20 கிரிக்கெட்டில் தங்கம் வென்ற இந்தியா.. பந்தாடப்பட்ட பாகிஸ்தான்!