India
”இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு வாக்குரிமை இருக்கக்கூடாது”: பா.ஜ.க MLA சர்ச்சை பேச்சு - குவியும் கண்டனம் !
இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை முன்னெடுத்து வருகிறது. அண்மையில் கூட கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரிக்கு வரக்கூடாது என இந்துத்துவ கும்பல் கூறிவருகிறது.
மேலும், இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு செல்லவேண்டும் என்ற முழக்கத்தை தொடர்ச்சியாக இவர்கள் பேசி வருகிறார்கள். அதேபோல், நாடுமுழுவதும் இந்துத்துவ கும்பல் இஸ்லாமியர்களுக்கு எதிராக மத மோதல்களை துண்டி வருகிறது. இந்த கும்பலுக்கு பலம் சேர்க்கும் வகையிலேயே பா.ஜ.க கட்சியின் அமைச்சர்கள் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் வரை பேசி வருகின்றனர்.
இந்நிலையில், இஸ்லாமியர்களுக்கு வாக்குரிமை இருக்கக்கூடாது என்றும், இந்தியாவில் இவர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே வாழ வேண்டும் என பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தாக்கூர், "1947ம் ஆண்டு பிரிவினையின்போதே இஸ்லாமியர்களுக்குத் தனிநாடு வழங்கப்பட்டுவிட்டது. இதனால் இவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லவேண்டும். இல்லை என்றார் இந்தியாவில் இரண்டாம் தர குடிமக்களாக வாழவேண்டும். இவர்களின் வாக்குரிமையைப் பறிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த இஸ்லாமிய வெறுப்பு பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தாக்குரின் இந்த பேச்சுக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!