India
வாடகைக்கு கார் எடுத்து ஓட்டுநர்கள் கொலை.. மர்ம ‘கும்பல்’ போலிஸில் சிக்கியது எப்படி?
ஹரியானா மாநிலத்திற்குட்பட்ட குருகிராம் பகுதியில் கார் ஓட்டுநர் ஒருவரை கொலை செய்து விட்டு அவரது காரை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து ஒரு பெண் உட்பட ஆறு பேரை போலிஸார் கைது செய்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த கும்பல் வாடகைக்குக் காரை எடுத்துக்கொண்டு ஆள்நடமாட்டமே இல்லாத பகுதிக்குச் சென்ற பிறகு காரின் ஓட்டுநரை அடித்துக் கொலை செய்துவிட்டு, காரை கொள்ளைடியத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர். இதுபோன்று இந்த கும்பல் கார்களை கொள்ளையடித்து வந்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த விஷால், அவரது காதலி ரேகா மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த விநோத், ஜிது, ரவி, ராகுல் ஆகிய ஆறு பேர் கொண்ட கும்பல்தான் இந்த தொடர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதையடுத்து போலிஸார் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கும்பல் மீது வேறு ஏதேனும் வழக்குகள் உள்ளனவா என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!