India
தந்தையின் கவனக்குறைவால் நடந்த விபரீதம்.. நீச்சல் குளத்தில் தவறி விழுந்த சிறுமிக்கு நேர்ந்த கதி!
புதுச்சேரி அடுத்த லாஸ்பேட்டை தாகூர் பகுதியைச் சேர்ந்தவர் அருணகிரி. இவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விடுதி ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில், தனது மகள் ரூபிஷேரிங்கை வேலைபார்க்கும் இடத்திற்குக் கூட்டிச் சென்றுள்ளார். அங்குக் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது.
இதையடுத்து அவர் விடுதியின் அருகே உள்ள கடைக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது அங்க குழந்தை இல்லை. இதனால், விடுதி முழுவதும் குழந்தையை தேடிபார்த்தபோது அங்கிருந்த நீச்சல் குளத்தில் குழந்தை சடலமாக மிதந்து கிடந்தைப்பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த போலிஸார் சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
த.வெ.க.வின் நாடகத்தால் நடைபெறும் இடைத்தேர்தல் - தக்க பாடம் புகட்டும் முனைப்பில் மக்கள்!
-
நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு; சமரசமின்றி போராடுவோம்: #BanNEET இயக்கத்திற்கு மு.க.ஸ்டாலின் அறைகூவல்!
-
#BANNEET என்னும் இலக்குடன் ‘கையெழுத்து இயக்கம்’ தொடக்கம்! - உயிர்க்கொல்லியை நீக்க மாபெரும் முன்னெடுப்பு!
-
ஏழைகளுக்காக ரூ.1 இட்லி... பாட்டி கமலாயிக்கு நிறுத்தப்பட்ட இலவச சிலிண்டர்: வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு?
-
சினிமாவை மிஞ்சிய தங்கக் கடத்தல் : சென்னை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன? சிக்கியது எப்படி?