India
விஷ வாயுவை செலுத்திக் கொண்டு குடும்பமே தற்கொலை.. விசாரணையில் வெளியான ’ஷாக்’ தகவல்!
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷிக். இவரது மனைவி அபீரா. இந்த தம்பதிக்கு ஆஸ்ரா பாத்திமா, அனோம் நிஷா பாத்திமா என இரண்டு பெண் சிறுமிகள் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலையில் இருந்தே இவர்கள் யாரும் வீட்டிலிருந்து வெளியே வரவில்லை. இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள் இவர்களின் வீட்டு கதை தட்டிப்பார்த்தபோது யாரும் கதை திறக்கவில்லை.
இதனால் அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அங்கு வந்த போலிஸார் கதவை உடைத்து உள்ளே சென்றுபார்த்த போது நான்கு பேரும் சடலமாக இருந்துள்ளனர். இதையடுத்து போலிஸார் அவர்களது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் குடும்பத்தில் கடன் தொல்லை அதிகரித்ததால், விஷ வாயுவை சுவாசித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
மேலும் இந்த வழக்கு குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!