India
புதுவைக்கு சுற்றுலா வந்தவர் கடல் அலையில் சிக்கி பலி; நண்பர்கள் காப்பாற்றியும் பலனளிக்காததால் பரிதாபம்!
கர்நாடகா மாநிலம் பெங்களூரில், தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றும் 8 இளைஞர்கள் நேற்று புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர்.
விடுதியில் அறை எடுத்து தங்கிய அவர்கள், இன்று கடற்கரையை சுற்றி பார்த்தனர். இதில் மனோஜ், கார்த்திக், விநாயக், சிவா ஆகிய நான்கு இளைஞர்கள் கடலில் இறங்கி குளித்துள்ளனர்.
அப்போது விநாயக் (26) கடல் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் விநாயக்கை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து இது குறித்து பெரியகடை காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விநாயகத்திற்கு முதல் உதவி சிகிச்சை அளித்து, ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த விநாயக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பெரியக்கடை போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுற்றுலா வந்த இளைஞர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“10,000 கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் உரையாடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” : ககன்தீப் சிங் தகவல்!
-
நமக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!
-
சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டம் - நவீன வசதிகளுடன் ரயில் நிலையங்கள் : ரூ.250.47 கோடி ஒப்பந்தம்!
-
அமைச்சர் பதவியை பறிக்கும் மசோதா : ஒன்றிய அரசின் திட்டத்திற்கு செக் வைத்த இந்தியா கூட்டணி!
-
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தொடரும் பாலியல் குற்றச்சாட்டு : போராடிய மாணவர்கள் மீது தடியடி!