India
“பழிக்குப் பழி” : கணவனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மனைவி - விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
கிருஷ்ணகிரி மாவட்டம், பண்ணந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நரேஷ்குமார். இவரது மனைவி சசிகலா. இராணுவ வீரரான நரேஷ்குமார் மேற்கு வங்க மாநிலத்தில் பணியாற்றி வந்தார். அப்போது, கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் குழந்தையை அழைத்துக்கொண்டு சசிகலா பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் கடந்த ஆண்டு மனைவியை அழைத்துச் செல்வதற்காக நரேஷ்குமார் மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட சண்டையில் மாமனார் மகாலிங்கத்தைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இதையடுத்து போலிஸார் நரேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இந்த வழக்கில் நரேஷ்குமார் சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளிவந்துள்ளார்.
இதையடுத்து மீண்டும் மனைவியின் குடும்பத்தாரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டிற்கு வந்து சண்டைபோட்ட நரேஷ்குமார் மீது சசிகலா மிளகாய்ப் பொடியை வீசியுள்ளார். இதில் கண் எரிச்சல் தாங்க முடியாமல் தவித்தபோது வீட்டிலிருந்த அரிவாளால் கணவனை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து குடும்பத்துடன் சேர்ந்து தலைமறைவாக உள்ள சசிகலாவைத் தேடி வருகின்றனர்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!