India
மகனுடன் சேர்ந்து கணவனை 7வது மாடியிலிருந்து தூக்கி வீசிவிட்டு நாடகமாடிய மனைவி.. மும்பையில் பகீர் சம்பவம்!
மும்பையைச் சேர்ந்தவர் சாந்தனு கிருஷ்ணா. இவரது மனைவி கீதா. இந்த தம்பதியினர் தனது மகன் ராகுலுடன் சேர்ந்து அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒன்றாக வசித்து வந்தனர்.
இதற்கிடையில், தம்பதிகள் இருவரும் அடிக்கடி சண்டைபோட்டு வந்துள்ளனர். இந்நிலையில், தனது கணவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலிஸாருக்கு அவரது மனைவி போன் செய்து தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலிஸார் அங்கு வந்து கிருஷ்ணாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் கீதாவிடம் கணவன் தற்கொலை குறித்து விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார்.
இதனால் போலிஸாருக்கு அவர் மீது சந்தேகம் எழுந்தது. தீவிரமாக விசாரணை செய்ததில் அதிர்ச்சி தகவல் வெளியானது. சொத்து தகராறு காரணமாக கீதாவும், அவரது மகன் ராகுலும் சேர்ந்து கிருஷ்ணாவை கொலை செய்து ஏழாவது மாடியிலிருந்து தூக்கி வீசியுள்ளனர். பின்னர் இவர்களே போலிஸாருக்கு போன் செய்து தற்கொலை நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!