India

’இதுக்கு இல்லையா சார் END’ புஷ்பா பட பாணியில் தொடரும் செம்மரக்கடத்தல்; தூக்கமின்றி அலையும் ஆந்திர போலிஸ்

அல்லு அர்ஜூனின் புஷ்பா பட பாணியில் ஆந்திராவை சுற்றியுள்ள பகுதியில் செம்மரங்களை கடத்துவதும் அதனை போலிஸார் அடுத்தும் பிடிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

புஷ்பா படத்தில் பால் ஏற்றி வரும் வேனில் வைத்து அல்லு அர்ஜூன் செம்மரங்களை கடத்துவது போல காய்கறி, பழங்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான பொருட்களை ஏற்றிச் செல்வது என பல வகைகளில் ஏமாற்றி செம்மரங்களை கடத்தும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது.

அவ்வகையில், திருப்பதியில் தாக்காளி ஏற்றி வந்த வேனில் வைத்து செம்மரங்களை கடத்தியவர் போலிஸ் சோதனையில் பிடிபட்டிருக்கிறார்.

சித்தூர் மாவட்டத்தின் சந்திரகிரியை அடுத்த மூலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் ஒருவர்தான் திருப்பதி வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை கடத்திச் செல்வதாக போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.

இதனையடுத்து மூலப்பள்ளி அருகே முகாமிட்ட சந்திரகிரி போலிஸார் வாகன சோதனையை தீவிரபடுத்தினர். அப்போது போலிஸாரை கண்டதும் சரக்கு வேன் ஒன்று நிற்காமல் தப்பிக்க முயன்றிருக்கிறது.

போலிஸாரும் தப்பிச்சென்ற வேனை துரத்திச் சென்றனர். ஒரு கிலோ மீட்டருக்கு பிறகு கட்டுப்பாட்டை இழந்த அந்த சரக்கு வேன் புதரில் புகுந்தது. இதனையடுத்து வேனில் சோதனையிட்ட போலிஸார் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

தக்காளி ஏற்றி வந்த வேனில் ஒரு அறை போன்று உருவாக்கி அதனும் செம்மரக்கட்டைகளை பதுக்கி, அதற்கு மேல் தக்காளி ட்ரேக்களை அடுக்கி வைத்து கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது. சோதனையில் சிக்கிய வேனில் இருந்து 14 செம்மரக்கட்டைகளை கைப்பற்றிய போலிஸார் வாகனத்தை ஓட்டிவந்த இளைஞரையும் கைது செய்தனர்.

Also Read: ’Pushpa Thaggede le’ புஷ்பா படம் பார்த்து செம்மரம் கடத்தல்; மராட்டிய போலிஸிடம் வசமாக சிக்கிய லாரி டிரைவர்