India
வாடகை கேட்ட HOUSE OWNER.. அரிவாளால் வெட்டிய குடும்பம்: கேரளாவில் நடந்தது என்ன?
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்குட்பட்ட உப்புத்துறை பகுதியைச் சேர்ந்தவர் சன்னி. இவருக்குச் சொந்தமான வீட்டில் குஞ்சமோன் ஜார்ஜ், அவரது மகன் சஞ்சு ஆகியோர் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் கடந்த மூன்று மாதங்களாக வாடகை பணம் தராமல் இருந்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உரிமையாளர் சன்னி, அவர்களிடம் 'வாடகை கொடுங்க, இல்ல வீட்டை பூட்டி சாவியை கொடுங்கள்' என கூறியுள்ளார்.
இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் வாய்த்தகராறு கைகலப்பாக மாறியது. பின்னர் ஆத்திரத்தில் சுஞ்சுமோன் மற்றும் அவரது மகன் இருவரும் சேர்ந்து கத்தியால் சன்னியைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து குஞ்சுமோன் ஜார்த், சஞ்சு, உறவினர் பென்னி ஆகிய மூன்று பேரைக் கைது செய்தனர்.
Also Read
-
Sticker தொடங்கி ஸ்ரீவைகுண்டம் பாலியல் விவகாரம் வரை.. பேரவையில் விஜய் ஆட்சியை வறுத்தெடுத்த LoP உதயநிதி!
-
“தமிழ்நாட்டின் உரிமையை வலுவாக்கவே புதிய நடுவர் மன்றம்!” : தங்கம் தென்னரசு விளக்கம்!
-
மின்துறையை நடத்துவது எப்படி?: த.வெ.க அமைச்சருக்கு பேரவையில் பாடம் எடுத்த செந்தில் பாலாஜி, சிவசங்கர்!
-
“மேயர் பிரியா மீது அவதூறு.. Protocol-ஐ தெரிந்து கொள்ளுங்கள்.. MLA பல்லவிக்கு சபாநாயகர் கொடுத்த பதிலடி”
-
அம்மோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் : பேரவையில் தி.மு.க வலியுறுத்தல்!