India
பிரச்சாரத்திற்கு வந்த கன்னையா குமார் மீது ஆசிட் வீச்சு?.. உ.பி தேர்தலில் அரங்கேறும் கொடூரம்!
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தலைவராக இருந்தவர் கன்னையா குமார். இவர் கல்லூரி காலத்திலிருந்தே பா.ஜ.க அரசின் மக்கள் விரோத திட்டங்களைக் கடுமையாக எதிர்த்துப் பேசிவந்தார். அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த கன்னையாகுமார் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இதையடுத்து உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காக கன்னையா குமார் லக்னோ வந்துள்ளார். பின்னர், காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்குச் சென்ற போது, மர்ம நபர்கள் சிலர் அவர் மீது ஆசிட் வீசியுள்ளனர். மேலும் அவர் உடன் இருந்த காங்கிரஸ் தொண்டர்கள் இருவர் மீதும் ஆசிட் பட்டுள்ளது.
இந்த ஆசிட் தாக்குதலில் கன்னையா குமாரின் உயிரி தப்பியதாகக் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஆட்சி வீசிய மர்ம நபர்களை தொண்டர்கள் பிடித்து போலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து உ.பி போலிஸார் கூறுகையில், "தேர்தல் பிரச்சாரத்திற்கு லக்னோ வந்த கன்னையா குமாருக்கு எதிராகப் பலர் கோஷமிட்டனர். அப்போது தேவன்ஷ் பாஜ்பாய் என்பவர் அவர் மீது மை வீசியுள்ளார். இது ஆசிட்டா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஆல்ரவுண்டர்... அணி நிர்வாகம் இவரைத்தான் தேர்ந்தெடுத்துள்ளதா?
-
50 திருநங்கையர்களுக்கு ஊர்க்காவல்படை உறுப்பினர் நியமன ஆணை! : முதலமைச்சர் வழங்கினார்!
-
முதலமைச்சருக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த விவசாய பெருமக்கள்! : முழு விவரம் உள்ளே!
-
தொடரும் இலங்கைக் கடற்படையின் அராஜகம் : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
2025 ஆம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுகள் 3 பேருக்கு அறிவிப்பு : யார் அவர்கள்?