India
அதிக நேரம் செல்போனில் பேசியதால் மிரட்டி, மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை... ஆந்திராவில் கொடூரம்!
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், தனது தந்தை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசிரியர்களிடம் புகார் கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் ஆசிரியர்கள், அவரது பெற்றோரை வரவழைத்து விசாரணை நடத்தியபோது அவர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். இதுகுறித்து ஆசிரியர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் சிறுமியின் தந்தையைக் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சில மாதங்களுக்கு முன்பு மாணவி செல்போனில் அதிக நேரம் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை அவரை மிரட்டி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
மேலும், உடல்நலக்குறைவு காரணமாக அவரது மனைவி ஐந்து மாதங்களுக்கு முன்பு தாய்வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மாணவி தந்தையுடன் வசித்து வந்துள்ளார். தந்தையின் தொல்லை தாங்க முடியாமல் ஒருகட்டத்தில் மனஉளைச்சல் அடைந்த அவர் ஆசிரியர்களிடம் புகார் கூறியுள்ளார்.
Also Read
-
தேசிய மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு : பிரதமர் மோடிக்கு முக்கிய ஆலோசனை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
“தணிக்கை வாரியத்தை கூட்டணியில் சேர்த்து கொண்ட பா.ஜ.க” : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
‘பராசக்தி’ திரைப்படம் - பேரறிஞர் அண்ணா வசனம் நீக்கம் : வாய் திறக்காத அ.தி.மு.க.!
-
“தி.மு.க-காரன் சிங்கில் டீயை குடித்துவிட்டு பம்பரமாக வேலை செய்வான்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர்!
-
தமிழ்நாடு முழுவதும் குறள் வாரவிழா : சிறப்பு காணொலியை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!