India
சானிடைசர் ஊற்றி குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்.. பரிதாபமாக உயிரிழந்த 7 மாத குழந்தை: காரணம் என்ன?
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் ராவத். இவரது மனைவி சுவர்ணா ரமாவத். இந்த தம்பதிக்கு ஏழு மாதத்தில் கைக்குழந்தை ஒன்று இருந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா காரணமாக வெங்கடேஷ் ராவத் வேலை இல்லாமல் இருந்துவந்துள்ளார். இதனால் குடும்பத்தில் பணப் பிரச்சனை எழுந்துள்ளது. இதன்காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கடந்த 11ம் தேதி மீண்டும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆவேசமடைந்த வெங்கடேஷ் ராவத் வீட்டிலிருந்து பாட்டிலை அடித்து உடைத்துவிட்டு அங்கிருந்து வெளியே சென்றுள்ளார்.
அப்போது, மனவேதனையிலிருந்த மனைவி சுவர்ணா குழந்தையுடன் சேர்ந்து சானிடைசர் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு இருவருக்கும் சிகிச்சை செய்யப்பட்டு வந்த நிலையில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் 70 % தீக்காயங்களுடன் சுவர்ணா சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்: “இதிலும் வாய்மூடி இருக்காமல்..” -விஜய் அரசுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
-
அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறை.. எல்லை மீறும் கர்நாடகாவுக்கு குவியும் கண்டனம்!
-
திமுக வழக்கறிஞர் அணி கூட்டம் : நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள் என்ன? - விவரம் உள்ளே!
-
மாத கணக்கில் அறுந்து கிடந்த மின் ஒயர்.. மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்.. காஞ்சியில் சோகம்!
-
“கழகத்தின் முதுகெலும்பு சட்டத்துறை.. பாசிச தவெக.. அமைச்சர்களைக் கூட தெரியாத முதல்வர்” : உதயநிதி பேச்சு!