India
20 மாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து.. இருவர் பலி... மீட்கப் போராடும் தீயணைப்பு வீரர்கள்!
மும்பையில் 20 மாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க 13 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மும்பையின் டார்டியோவில் உள்ள பாட்டியா மருத்துவமனைக்கு அருகில் 20 மாடிகள் கொண்ட கமலா கட்டடத்தின் 18வது மாடியில் இன்று காலை 7 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கட்டிடத்தில் தீப்பிடித்ததை அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 13 தீயணைப்பு வாகனங்கள் கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பாட்டியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கடுமையான தீக்காயமடைந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தீ கட்டுக்குள் உள்ளது ஆனால் புகை அதிகமாக உள்ளது என்றும் மக்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“முதல்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ இயற்றப்பட்டுள்ளது!” : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!
-
ரோடு ஷோ - தமிழ்நாடு அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
-
பீகார் தேர்தல் - குளறுபடிகளுக்கு இடையே நிறைவடைந்த முதற்கட்ட வாக்குப்பதிவு! : 2ஆம் கட்டத் தேர்தல் எப்போது?
-
”NDA கூட்டணி அரசை பீகார் மக்கள் தூக்கி எறிவார்கள்” : பரப்புரையில் பிரியங்கா காந்தி MP பேச்சு!
-
தமிழ்நாடு முழுவதும் நவ.11 அன்று SIR-க்கு எதிராக ஆர்ப்பாட்டம்! : மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு!