India
ரத்தம் சொட்ட சொட்ட கணவனின் தலையுடன் உலா வந்த மனைவி; பீதியில் ஆழ்ந்த மக்கள் - ரேனிகுண்டாவில் பரபரப்பு!
சித்தூரில் உள்ள ரேனிகுண்டாவின் பக்கா வீதி பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (54). அவரது மனைவி வசுந்த்ரா (50). இந்த தம்பதிக்கு 20 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட மகன் ஒருவர் இருக்கிறார்.
கணவன் மனைவி இடையே அண்மைக்காலமாக தொடர்ந்து கருத்து வேறுபாடு நடைபெற்று வந்திருக்கிறது. இந்நிலையில் இன்று மீண்டும் இவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கொடூர கொலையில் போய் முடிந்திருக்கிறது.
அதன்படி ரவிச்சந்திரனின் கழுத்தை அறுத்துள்ள வசுந்த்ரா ரத்தம் சொட்ட சொட்ட கணவரின் தலையை பையில் போட்டுக் கொண்டு பொது வெளியில் சென்றிருக்கிறார்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். பின்னர் உடனடியாக விரைந்த போலிஸார் வசுந்த்ராவை கைது செய்திருக்கிறார்கள். மேலும் இது தொடர்பாக வசுந்த்ராவிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Also Read
-
முதலமைச்சரின் தீர்மானம் - “இதெல்லாம் ஆர்.என்.ரவிக்கு உறைக்குமா ?” :ஆளுநரை வெளுத்து வாங்கிய ‘முரசொலி’ !
-
”இடஒதுக்கீடு கொள்கையின் பிதாமகன் தமிழ்நாடு” : சட்டப்பேரவையில் அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
”இன்ஸ்டா ரீல்ஸ் அரசியல் செய்யும் பழனிசாமி” : அமைச்சர் சிவசங்கர் பதிலடி!
-
தமிழ்நாட்டை தண்டிப்பது ஏன்? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு 10 கேள்விகளை எழுப்பிய அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
BLINKIT வணிக தளத்தில் ‘கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகள்!’ : முழு விவரம் உள்ளே!