India
குடிக்கப் பணம் தராத கர்ப்பிணி மனைவி.. கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்: நடந்தது என்ன?
ஜார்கண்ட் மாநிலம், சத்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் திலேஷ்வர் கஞ்சு. இவருக்குக் கடந்த ஆண்டு பிரியா தேவி என்று பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.இதையடுத்து பிரியா தேவி ஏழு மாதம் கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் மதுவுக்கு அடிமையான திலேஷ்வர் குடித்து விட்டு அடிக்கடி மனைவியிடம் சண்டைபோட்டு வந்துள்ளார். மேலும், குடிப்பதற்காக வீட்டில் இருக்கும் பொருட்களை விற்று மது குடித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். இதற்கு அவர் தர மறுத்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த திலேஷ்வர் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரை கைது செய்து பிரியா தேவியின் உடலை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
குடிக்கப் பணம் தராததால் மனைவியைக் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!