India
”3 விரல்கள், கழுத்தில் படுகோயம்” - மாஞ்சா நூலால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்; மும்பையில் பரிதாபம்!
மும்பையின் சுனாப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஸ்வப்னில் கைகர். இவர் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தில் தொழில்நுட்பப் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். கடந்த செவ்வாய் அன்று (ஜன.,11) மாலை கைகர் அவரது நண்பர் அமோல் பவாருடன் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது கைகர் மீது மாஞ்சா நூல் பட்டிருக்கிறது. இது தொடர்பாக பேசியுள்ள கைகர் "நாங்கள் உள்நாட்டு விமான நிலையத்திற்கு எதிரே உள்ள மேம்பாலத்தை கடக்கும்போது திடீரென ஒரு நூல் என் கழுத்தை அறுத்துவிட்டது, நான் அதை என் கையால் இழுக்க முயற்சித்தேன், ஆனால் அதனால் என் கழுத்தும் கையும் காயமுற்றது.” எனக் கூறினார்.
இதனையடுத்து பின்னால் அமர்ந்திருந்த அமோல் கைகரை மாஹிமில் உள்ள எஸ்.எல். ரஹேஜா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார், அங்கு அவர் கழுத்திலும் விரல்களிலும் பல தையல்கள் போடப்பட்டது.
மாஞ்சா தாக்கியதில் கைகரின் மூன்று விரல்கள் வெட்டப்பட்டு கழுத்தில் மூன்று தையல்களும், அவரது விரல்களில் இரண்டு தையல்களும் போடப்பட்டுள்ளன. பின்னர் வைல் பார்லே போலிஸார் கைகரின் வாக்குமூலத்தை பதிவு செய்ததோடு சம்பவம் நடந்த இடத்தையும் ஆய்வு செய்திருக்கிறார்கள்.
அதில், கைகருக்கு மாஞ்சா நூலால்தான் காயம் ஏற்பட்டது உறுதியானது. இதனையடுத்து உயிரை காவு வாங்கும் மாஞ்சா நூலை கொண்டு காற்றாடி விடுவோருக்கு கடுமையான எச்சரிக்கையை போலிஸார் விடுத்துள்ளனர்.
Also Read
-
தேர்தல் ஆணையத்தை கொண்டு மக்களாட்சிக்கு வேட்டு வைக்கும் பா.ஜ.க : முரசொலி கண்டனம்!
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?