India

திருமணமானவர்களுக்கு மட்டும் என்ன விதிவிலக்கு? - No Means No தான் - டெல்லி ஐகோர்ட் பரபர கருத்து!

திருமண உறவே என்றாலும் கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபடச் செய்வது குற்றச்செயலாக கருதப்பட வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டத்தில் கணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை ரத்து செய்ய வேண்டும் என இந்திய ஜனநாயக மகளிர் சங்கமும், ஒரு ஆண் மற்றும் பெண்ணும். வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஜன.,7ம் தேதி இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பெண் சார்பில் வாதாடிய போது மனைவியாகவே இருந்தாலும் கட்டாயப்படுத்தி தாம்பத்யத்தில் ஈடுபடுவதும் பாலியல் அத்துமீறல்தான். திருமணம் என்ற பேரில் எத்தனையோ பாலியல் வன்கொடுமைகள் நாட்டில் நடைபெற்று வருகிறது.

அவற்றில் எத்தனை புகார்களாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கான தகவல்கள் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை தொடர்ந்து டெல்லி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்டாயப்படுத்தி மனைவியை பாலியல் உறவில் ஈடுபடச் செய்வது கொடுமையான குற்றமாகும்.

திருமணம் ஆன பெண்ணும், ஆகாத பெண்ணும் ஒவ்வொரு சட்டத்திலும் வெவ்வேறாகவே கருதப்படுகின்றனர் என கூறியிருக்கிறார். இதனையடுத்து வழக்கை ஜனவரி 10ம் தேதிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

இந்நிலையில், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, “கணவன் மனைவியாகவே இருந்தாலும் விருப்பமின்றி உறவுகொள்வது பலாத்காரம். முதன்மையான முறையில் தண்டிக்கப்பட வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது. பெண்களின் பாலியல் சுயாட்சி, உடல் ஒருமைப்பாடு மற்றும் இல்லை என்று சொல்லும் உரிமை ஆகியவற்றில் சமரசம் செய்து கொள்ள முடியாது.” என நீதிபதி ஹரி ஷங்கர் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், விருப்பமில்லாமல் பாலியல் வன்கொடுமை செய்தால் 10 ஆண்டுகள் சிறை விதிக்க சட்டம் வழி வகுக்கும் போது, திருமணமான தம்பதிகளுக்கு இருக்கும் விதிவிலக்கை களைய வேண்டும். எனக் கூறியுள்ளார்.

Also Read: காதலனின் திருமணத்தை நிறுத்த குழந்தையை கடத்திய திருமணமான பெண் - போலிஸையே அதிரவைத்த திடுக்கிடும் தகவல்!