India
"நான் தப்பு பண்ணிட்டேன்..” : பா.ஜ.கவில் சேர்ந்து 6 நாட்களிலேயே மீண்டும் காங்கிரஸுக்கு திரும்பிய MLA!
பஞ்சாப் சட்டப்பேரவைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஹர்கோபிந்த்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பல்வீந்தர் சிங் லட்டி கடந்த 28-ஆம் தேதி பா.ஜ.கவில் சேர்ந்தார்.
அவருடன் மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ பதே ஜங் சிங் பஜ்வாவும் பா.ஜ.கவில் சேர்ந்தார். இது காங்கிரஸ் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஹர்கோபிந்த்பூர் எம்.எல்.ஏ பல்வீந்தர் சிங் லட்டி, பா.ஜ.கவில் சேர்ந்த 6 நாட்களில் அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார்.
சண்டிகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, பஞ்சாப் மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஹரிஷ் சவுத்ரி ஆகியோர் முன்னிலையில் பல்வீந்தர் சிங் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.
இதுகுறித்துப் பேசியுள்ள பல்வீந்தர் சிங், தனது ஆதரவாளர்களும் பொதுமக்ககளும் பா.ஜ.கவில் சேரும் தனது முடிவு குறித்து கேள்வி எழுப்பியபோது, அந்த முடிவை அவர் இரண்டாவது முறையாக யோசித்ததாகவும், தனது தொகுதியின் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவு பா.ஜ.கவுக்கு துளியும் இல்லை என்பதை உணர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், "நான் இதைப் பற்றி தீவிரமாகச் சிந்தித்தேன், நான் தவறு செய்ததை உணர்ந்து காங்கிரஸுக்குத் திரும்ப முடிவு செய்தேன்" என பல்வீந்தர் சிங் லட்டி கூறியுள்ளார். இந்நிகழ்வு பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!