India

இந்தியாவில் 1,000 கடந்த ஒமைக்ரான்.. 20 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு: எச்சரிக்கும் சுகாதாரத்துறை!

இந்தியாவில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா திரிபான ஒமைக்ரான் தொற்றும் இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது.

இதுவரை இந்தியாவில் 1270 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 16764 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் 450 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. அடுத்தபடியாக டெல்லியில் 320 பேருக்குத் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் 21 மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளது.

ஒமைக்ரான் தொற்றைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் இரவு ஊரடங்கு போன்ற தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "இந்திய பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒமைக்ரான்" : ரிசர்வ் வங்கி கவலை!