India
குடிபோதையில் மதுபானம் என நினைத்து ‘ஆசிட்’ குடித்தவர்களுக்கு நேர்ந்த கதி... திரிபுராவில் அதிர்ச்சி!
திரிபுரா மாநிலம் தலாய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாபிராம் ரியாங். இவரது மனைவி குழந்தையுடன் கஞ்சன்சார்ராவில் உள்ள உறவினர்கள் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் இது குறித்து கணவனிடம் தெரிவித்துள்ளார். பிறகு பாபிராம் மனைவியைக் காண அங்கு வந்துள்ளார்.
இதையடுத்து அங்கு விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 10க்கும் மேற்பட்டோர் மது குடித்துள்ளனர். அப்போது குடிபோதையிலிருந்த சச்சீந்திரா ரியாங், ஆதிராம் ரியாங் பாபிராம் ரியாங் ஆகிய மூன்று பேர் மதுபானம் என நினைத்து அமிலத்தைக் குடித்துள்ளனர்.
உடனே அவர்கள் மயங்கி கீழே விழுந்துள்ளனர். விஷயம் அறிந்து உறவினர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் மூன்று பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!