இந்தியா

’தகன மேடையில் தீ வைக்கச் சென்றபோது கண் விழித்த முதியவர்’ - அரண்டு போன உறவினர்கள்; டெல்லியில் விநோதம்!

இறந்ததாக நினைத்து இறுதிச் சடங்குகளை முடித்து தகனம் செய்ய எத்தனித்தபோது முதியவர் கண்விழித்த சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.

’தகன மேடையில் தீ வைக்கச் சென்றபோது கண் விழித்த முதியவர்’ - அரண்டு போன உறவினர்கள்; டெல்லியில் விநோதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லியின் திக்ரி குர்த் பகுதியைச் சேர்ந்தவர் 62 வயதான சதிஷ் பரத்வாஜ். மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று முன் தினம் இறந்துவிட்டதாக எண்ணி உறவினர்கள் சதிஷுக்கு இறுதிச் சடங்குகளை நடத்தியிருக்கிறார்கள்.

அப்போது உறவினர்கள் நண்பர்கள் என பலரும் வந்து இரங்கலையும் ஆறுதல்களை தெரிவித்திருகிறார்கள். அதனையடுத்து மயானத்திற்கு கொண்டுச் செல்லப்பட்ட போது அங்கும் சில சடங்குகளை முடித்துவிட்டு தகனம் செய்யும் வரை சென்றிருக்கிறார்கள்.

அப்போது முதியவரின் முகத்தில் போர்த்தப்பட்ட துணியை விலக்கியபோதுதான் அங்கிருந்த உறவினர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, தகன மேடையில் இருந்த முதியவர் கண் விழித்து பார்த்தோடு அவர் மூச்சு விடும் சத்தமும் பலமாக இருந்ததுள்ளது.

’தகன மேடையில் தீ வைக்கச் சென்றபோது கண் விழித்த முதியவர்’ - அரண்டு போன உறவினர்கள்; டெல்லியில் விநோதம்!

இதனையடுத்து அந்தக் கூட்டத்தில் இருந்த மருத்துவர் ஒருவர் முதியவரின் நாடித் துடிப்பை சோதித்தபோது அவர் உயிருடன் இருப்பதை உறுதி செய்தார். உடனாடி டெல்லி போலிஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆம்புலன்ஸும் வரவழைக்கப்பட்டது.

பின்னர் ராஜா ஹரிச்சந்திர மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முதியவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த சம்பவம் தொடர்பான போலிஸாரின் மருத்துவமனையின் அலட்சியம் ஏதும் இல்லை என தெரியவந்துள்ளது.

தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி காண்போரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. மேலும் முறையான மருத்துவ ஆலோசனை பெறாமல் இவ்வாறு செயல்பட்ட உறவினர்களும் நெட்டிசன்களின் விமர்சனங்களில் விழ தவறவில்லை.

banner

Related Stories

Related Stories