India
“போலி அதிகாரிகள் மிரட்டல்.. இளம் நடிகை தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்” : விசாரணையில் அதிர்ச்சி தகவல் !
மும்பையில் உள்ள ஜோகேஷ்வரி பகுதியைச் சேர்ந்த இளம் நடிகை கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி ஒன்றிற்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த இரண்டு நபர்கள் தங்களைப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் என கூறி, 'போதைப் பொருள் பயன்படுத்தியதால் உங்களைக் கைது செய்தாக' நடிகையிடம் கூறியுள்ளனர்.
இதைக்கேட்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அதிகாரிகள் என கூறிவந்தவர்கள் ரூ.40 லட்சம் கொடுத்தால் விட்டுவிடுவதாகத் தெரிவித்துள்ளனர். பிறகு இவ்வளவு தொகையைக் கொடுக்க முடியாது என கூறியதை அடுத்து ரூ.20 லட்சம் தரவேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.
பிறகு வீட்டிற்கு வந்த நடிகை, இவ்வளவு பணத்தை எப்படி ஏற்பாடு செய்வது என்று தெரியாமல் தவித்து வந்துள்ளார். மேலும் இது குறித்து யாரிடமும் தெரிவிக்காமல் வந்துள்ளார். இந்நிலையில் திடீரென இளம் நடிகை தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து பார்டிக்கு நடிகையுடன் சென்ற நண்பர்களை போலிஸார் விசாரணை செய்தனர். அப்போது நடிகையுடன் பார்டிக்கு சென்ற ஆசிர் காஜி என்பவர் தான், தனது நண்பர்களை வைத்து போதைப்பொருள் அதிகாரிகள் என கூறி பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து இவர்களை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
4 ஆண்டுகள் - ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!
-
மதுரை கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு ஏன்? : மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி NVN சோமு MP!
-
‘வந்தே மாதரம்’, ‘ஜெய்ஹிந்த்’, ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ அனைத்தும் சமம் தான்!” : சு.வெங்கடேசன் எம்.பி பேச்சு!
-
கர்நாடகாவால் மாசுப்படும் தென்பெண்ணை ஆறு : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி-க்கள் குற்றச்சாட்டு!
-
வேலைவாய்ப்புகளை உருவாக்காதது ஏன்? : மக்களவையில் ஒன்றிய அரசுக்கு தி.மு.க MPக்கள் கேள்வி!