India
தொலைந்துபோன செல்போன்.. விரக்தியில் விபரீத முடிவு எடுத்த பெண்!
பீகார் மாநிலம், கஜாஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் பிட்டு சிங். இவரது மனைவி கணவர் வெளியூர் சென்ற நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அப்போது, வெளியே விளையாட சென்றிருந்த பிட்டு சிங்கின் மகன் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது தாய் தூக்கில் தொங்கியிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் இது குறித்து தந்தைக்குச் சிறுவன் தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்த பிட்டு சிங் போலிஸாருக்கு நடந்த வற்றை தெரிவித்துள்ளார். பிறகு போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த தற்கொலை குறித்து போலிஸார் விசாரணை நடத்தினர். இதில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் செல்போன் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனது. இதனால் அவர் மிகவும் வருத்தத்துடன் இருந்துள்ளார். இதனால் இவர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் போலிஸார் அந்த பெண்ணின் கணவர் உட்படப் பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !