India
இளம்பெண்ணை எரித்துக்கொன்று, தானும் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்... கேரளாவில் பயங்கரம் - நடந்தது என்ன?
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்திற்குட்பட்ட திக்கோடி பகுதியில் பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த எட்டு நாட்களுக்கு முன்புதான் கிருஷ்ணபிரியா என்ற பெண் புதிதாக வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
இவரை அதே பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்ற இளைஞர் காதலித்து வந்துள்ளார். பின்னர் கிருஷ்ணபிரியாவிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி நந்தகுமார் கூறியுள்ளார். இதற்கு கிருஷ்ணபிரியா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நந்தகுமார் நேற்று பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்து, திடீரென கிருஷ்ணப் பிரியா மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்துள்ளார். இதைப்பார்த்து அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அப்போது திடீரென நந்தகுமார் தன்னைதானே தீவைத்துக் கொண்டார். பின்னர் இருவரையும் மீட்ட அப்பகுதி மக்கள் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். காதலிக்க மறுத்தால் இளம்பெண்ணுக்குத் தீவைத்து இளைஞரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!