India

ஆற்றில் தலைகுப்புற கவிழ்ந்த பேருந்து.. 9 பேர் பலி - பல உயிர்களைக் காப்பாற்றிய மீனவர்கள்: நடந்தது என்ன?

ஆந்திரா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டத்திலிருந்து மேற்கு கோதாவரியில் உள்ள ஜங்காரெட்டிகுடெம் நோக்கி இன்று அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

இதையடுத்து பேருந்து ஏலூர் அருகே உள்ள ஆற்றுப்பாலத்தைக் கடக்க முயன்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தில் பயணம் செய்தவர்கள் ஆற்று நீரில் சிக்கிக் கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பக்கத்துக் கிராமத்திலிருந்த மீனவர்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை படகுகள் மூலம் மீட்டனர். பின்னர் அங்கு வந்த போலிஸார் மற்றும் மீட்புக்குவினர் மீனவர்களுடன் சேர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். பேருந்தில் இருந்தவர்களை மீட்டு படகுகள் மூலம் கரைக்கு அழைத்துச் சென்றனர்.

இருந்தபோதும் இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வெடித்த பெட்ரோல் டேங்கர் லாரி.. தீயில் கருகி 62 பேர் பலி.. ஹைதி நாட்டை உலுக்கிய சம்பவம்!