India
பார் உரிமையாளரால் மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை.. டெல்லியில் அதிர்ச்சி - நடந்தது என்ன?
டெல்லியில் பிரபல மால் ஒன்றிலிருந்து இளம்பெண் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் ரோகினி ப்ரசாந்த் விகார் பகுதியில் மால் ஒன்றில் உள்ள பாரில் 21 வயது பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த சனிக்கிழமை அந்த மாலின் அடித்தளத்தில் சடலமாகக் கிடந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதை உறுதிசெய்தனர்.
மேற்கொண்டு விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அப்பெண்ணின் குடும்பத்தினர் நேபாளத்தில் வசித்து வருகின்றனர். அந்தப் பெண் டெல்லியில் உள்ள மால் ஒன்றின் பாரில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் பார் உரிமையாளர் அப்பெண்ணை நடனமாட வற்புறுத்தியுள்ளார். நடனமாட விருப்பமில்லாத நிலையில் அப்பெண் மாலின் நான்காவது மாடியிலிருந்து கீழே குதித்து உயிரிழந்துள்ளார்.
பாரில் உள்ள சிசிடிவி கேமராவை கைப்பற்றிய காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக பார் உரிமையாளர் உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- உதயா
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?