India
பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையைக் கொன்ற தாய் : போலிஸ் விசாரணை - நடந்தது என்ன?
கேரள மாநிலம், திருவல்லா அடுத்த முண்டக்காயம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி நிஷா. இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் நிஷா மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார். இதையடுத்து அவருக்குக் கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து வீட்டின் குளியல் அறையில் பிறந்த ஆண் குழந்தை இறந்து கிடந்ததைப் பார்த்து எல்லோரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
குடும்ப வறுமையால் ஐந்து குழந்தைகளை வளர்ப்பதிலேயே நிஷாவுக்குச் சிரமம் இருந்துள்ளது. இதில் ஆறாவதாக ஒரு குழந்தை பிறந்ததால் அவர் மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார்.
இந்நிலையில், பிறந்து நான்கு நாட்களே ஆன ஆண் குழந்தையை வீட்டின் கழிவறையில் உள்ள தண்ணீர் வாளியில் மூழ்கடித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Also Read
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !
-
பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!