India
போராட்டக்காரர்களை மதிக்காத ஆரோவில் நிர்வாகம்; மரங்களை வெட்ட தடை விதித்த பசுமைத் தீர்ப்பாயம்!
புதுச்சேரியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆரோவில் நகரம். இதன் அனைத்து பணிகளும் ஆரோவில் ஃபவுண்டேஷன் என்பதன் மூலமே மேற்கொள்ளப்படும்.
அந்த அமைப்பின் தலைவர் பதவிக் காலம் கடந்த நவம்பருடன் முடிவடைந்ததை அடுத்து புதிய தலைவராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும், நிர்வாகக் குழு உறுப்பினராக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை என 8 பேர் நியமிக்கப்பட்டனர்.
இதனையடுத்து கிரவுன் என்ற திட்டத்தின் கீழ் ஆரோவில் நகரத்தில் வளர்ச்சி என்கிற பேரில் சாலை போன்ற மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள அங்குள்ள மரங்களை வெட்டும் பணி தொடங்கியது. இந்த செயலுக்கு ஆரோவில் பகுதியில் உள்ள வெளிநாடு மற்றும் உள்ளூர்வாசிகளிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பின.
மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிராக பலகட்ட போராட்டங்களையும் அவர்கள் முன்னெடுத்தனர். இருப்பினும் மரங்கள் வெட்டும் பணி முடிந்தபாடில்லை. இந்நிலையில், நவ்ரோஸ் மோடி என்பவர் ‘காடுகள் பாதுகாப்புச் சட்டம் 1980ன் கீழ் மரங்களை வெட்டவும் சாலை அமைக்கவும் உரிய அனுமதியை பெற்றிருக்க வேண்டும் எனவும், சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை தயாரிக்கவும் ஆரோவில் நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம், மனுதாரரின் வாதத்தில் முகாந்திரம் இருப்பதால் வழக்கின் முக்கியத்துவத்தை கருதி ஆரோவில் நகரில் மரங்களை வெட்டுவதற்கு டிசம்பர் 17ம் தேதி வரை இடைக்கால தடை விதிக்கப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது.
Also Read
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !