India

பிபின் ராவத் பயணித்தது உறுதி; 7 பேரின் உடல்கள் மீட்பு? - காட்டேரி மலையில் நடப்பது என்ன? பரபரப்பு தகவல்!

குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ அலுவலர்களுக்கான பயிற்சி கல்லூரியில் நடக்க இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாட்டின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பங்கேற்பதாக இருந்தது.

இதற்காக கோவை ராணுவ மையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற்கு பிபின் ராவத்தும், அவரது மனைவி மதுலிகா ராவத், ராணுவ அதிகாரிகளான பிரிகேடியர் L.S.லிட்டர், லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங், குருசேவக் சிங், ஜிதேந்திரகுமார், விவேக்குமார், சாய் தேஜா சத்பா என 14 பேர் பயணித்திருக்கின்றனர்.

இந்நிலையில், நண்பகல் 12.30 மணியளவில் காட்டேரி நஞ்சப்பா சத்திரம் மலைப்பகுதியில் பிபின் ராவத் உள்ளிட்டோர் என்ற ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்திற்குள்ளானது. சுமார் ஒன்றரை மணிநேரமாக விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது.

Also Read: IAFMi - 17V5 ரக ஹெலிகாப்டரில் குடும்பத்துடன் வந்த பிபின் ராவத்.. நீலகிரி வந்த காரணம் என்ன ? #Exclusive

இருப்பினும் கோவையில் இருந்து ஆறு பேர் கொண்ட மருத்துவக் குழு சம்பவ இடத்துக்கு விரைந்திருக்கிறது. இதுகாறும் மேற்கொள்ளப்பட்டுள்ள மீட்பு பணியில் 7 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்திருப்பதாகவும் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளது எனவும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் முப்படை தலைமை தளபதியான பிபின் ராவத்தின் நிலை என்ன என்பது குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. இதனிடையே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து பிரதமர் மோடி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்களோடு அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் விபத்து தொடர்பாக தீவிர விசாரணையை உடனடியாக மேற்கொள்ளவும் விமானப் பட அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Also Read: முப்படை தலைமை தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து - நால்வர் உயிரிழந்ததாக தகவல்? நடந்தது என்ன?