India
இந்தியாவில் பிப்ரவரியில் கொரோனா 3வது அலை.. IIT பேராசிரியரின் எச்சரிக்கை என்ன?
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உருமாறிக் கொண்டே வருவது மக்களை அச்சமடைய வைத்துள்ளது. ஏற்கனவே டெல்டா, டெல்டா பிளஸ் என உருமாறிய கொரோனா தொற்று தற்போது ஒமைக்ரான் தொற்றாக உருமாற்றம் அடைந்துள்ளது.
இந்த ஒமைக்ரான் தொற்று டெல்டா பிளஸ் தொற்றை விட மிகவும் வேகமாகப் பரவக்கூடியது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதுவரை ஒமைக்ரான் 38 நாடுகளில் பரவியுள்ளது.
அமெரிக்காவில் மட்டும் 11 மாகாணங்களில் ஒமைக்ரான் வைரஸ் ஊடுருவியுள்ளது. அதேபோல், வயதானவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு கடும் பாதிப்புகள் ஏற்படும் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தியாவில் பிப்ரவரியில் மூன்றாவது அலை ஏற்படலாம் என ஐ.ஐ.டி பேராசிரியர் மனீந்திர அகர்வால் எச்சரிக்கை செய்துள்ளார். இதுகுறித்து மனீந்திர அகர்வால், "ஒமைக்ரான் தொற்றால் இந்தியாவில் பிப்ரவரியில் மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இது இரண்டாம் அலையை விட பாதிப்பு குறைவாகவே இருக்கும்.
தினந்தோறும் 1.5 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்படலாம். ஒமைக்ரான் தொற்றைப் பார்க்கும்போது, டெல்டா தொற்று ஏற்படுத்திய தாக்கத்தைக் காட்டிலும் பாதிப்பு குறைவாகத்தான் இருக்கும். தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவினாலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது. கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை உரிய முறையில் கடைபிடித்தால் பரவலைத் தடுக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
போராளிக்கான தழும்பு...! விஜய்யின் 'மிசா' குறித்த விமர்சனத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி
-
நடிக்காதே நயவஞ்சகா...! விஜய் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் : முரசொலி ஆவேசம்!
-
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் - தி.மு.க. சார்பில் களம் இறங்கும் சேது : மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
-
“இதுபோன்ற ‘உடல்மொழிகள்’ கண்ணியமான அணுகுமுறை இல்லை!” : முதல்வருக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் கண்டனம்!
-
“சட்டமன்ற உரிமை என்பது அரசியல் பழிவாங்கலுக்கான ஆயுதமல்ல!” : தி.மு.க கொறடா எ.வ.வேலு கண்டனம்!