India
குடும்ப பிரச்சனையால் மனமுடைந்த பெண்.. 5 பெண் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை : நடந்தது என்ன?
ராஜஸ்தான் மாநிலம், கலியாஹேதி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவ்லால் பன்ஜாரா. இவரது மனைவி பத்மாதேவி. இந்த தம்பதியருக்கு ஏழு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உறவினர் ஒருவரின் இரங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பக்கத்து கிராமத்திற்கு சிவ்லால் சென்றுள்ளார்.
அப்போது, பத்மாதேவி தனது ஐந்து பெண் குழந்தைகளுடன் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கிணற்றில் சடலங்கள் மிதப்பதைப் பார்த்த கிராம மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பிறகு அங்கு வந்த போலிஸார் ஆறு பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியபோது கணவனுடன் அடிக்கடி ஏற்படும் சண்டை காரணமாக அவர் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
மேலும் மற்ற இரண்டு குழந்தைகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததால் அவர்கள் உயிர் தப்பியதும் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து அவரது கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!
-
சூழ்ந்த மக்கள்.. செய்தி சேகரித்த பத்திரிகையாளர்.. மிரட்டிய தவெக அமைச்சரின் ஆதரவாளர்.. வைரலாகும் வீடியோ!
-
தொகுதி மறுவரையறை கூட்டம் எதற்காக? ; தவெக அரசை இயக்குவது? : அடுக்காடுக்காக கேள்விகளை எழுப்பிய கனிமொழி MP!
-
ஆபத்தான FCRA சட்டம் : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கோரிக்கை வைத்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!