India

3 அடி உயரமுடையவர் ஓட்டுநர் உரிமம் பெற்றது எப்படி? ஐதராபாத்தைச் சேர்ந்தவரின் நெகிழ்ச்சி கதை!

தெலங்கானாவின் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் கட்டிப்பள்ளி ஷிவ்பால். 42 வயதான இவரது மொத்த உயரம் மூன்று அடியாகும்.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளியான இவர் அண்மையில் யூடியூபில் கால்களை இழந்தவர் கார் ஓட்டும் வீடியோவை பார்த்துள்ளார்.

இதனையடுத்து தானும் கார் ஓட்ட வேண்டும் என எண்ணி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் 15 நாட்கள் தங்கி அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கான கார் ஓட்டும் பயிற்சியை கற்றிருக்கிறார்.

இந்தியா திரும்பியவர், சில நண்பர்களின் உதவியுடன் கார் ஓட்டப் பழகியதோடு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு பெரிதும் முயற்சித்திருக்கிறார்.

அப்போது சென்னையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் லைசென்ஸ் பெற்றது தொடர்பான நகலை காண்பித்திருக்கிறார். தற்போது அவருக்கான ஓட்டுநர் உரிமத்தையும் பெற்றுள்ளார் ஷிவ்பால்.

இது தொடர்பாக பேசியுள்ள ஷிவ்பால், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டுநர் பயிற்சி பள்ளியை தொடங்க முடிவெடுத்திருப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Also Read: திறப்புவிழா அன்றே உடைந்து சிதறிய சாலை... MLA தேங்காய் உடைத்ததால் அம்பலமான பா.ஜ.க ஊழல்!