India
வேளாண் சட்டம்: "தோற்று விடுவோம் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இது" - பிரதமர் மோடியை சாடிய CPIM செயலாளர்!
சென்னை தியாகராய நகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஒன்றிய அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற்றதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஓராண்டு காலம் சிறப்பாக நடைபெற்றது. விவயாசாயிகளின் போராட்டத்திற்கு மோடி அரசு அடிபணிந்துள்ளது. விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என கூறினார்.
வேளாண் சட்டத்தில் போராட்டத்தில் உயிரிழந்த 700-ம் மேற்பட்ட விவசாயிகளுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறோம். இந்த போராட்டத்தின் வெற்றி கார்ப்பரேட்களுக்கு கிடைத்த மரண அடி என்றும் திமுக அரசு வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. இந்த சட்டத்தை விவசாயிகளுக்கு புரியவில்லை என மோடி கூறுவது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போன்றதாகும்.
இப்போதும் இந்த சட்டத்தின் தீமைகள் குறித்து பிரதமர் மோடிக்கு புரியாதது வருத்தமளிக்கிறது. தமிழகத்தில் வேளாண் சட்டத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.
தேர்தலுக்கு முன்னரே தோற்று போயுள்ளோம் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் பிரதமர் மோடி வேளாண் சட்டத்தை பின் வாங்கியதற்கான அறிவிப்பு. வேளாண் சட்டத்தை திரும்ப பெற்றதன் மூலம் விரைவில் நடைபெறவுள்ள 5 மாநில தேர்தல்களில் வெற்றி பெற முடியாது.
பெட்ரோல், டீசல் மீதான் வரியை மத்திய அரசு முழுக்க முழுக்க அனுபவித்துகொண்டு மாநில அரசுக்கு எதிராக தமிழக பாஜக போராட்டம் நடத்துவது கபட நாடகம் என விமர்சித்த அவர், மோடிக்கு அடுத்து வேளாண் சட்டத்தை இந்தியாவிலே அதிகமாக ஆதரித்தது பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இனியாவது தங்களது தவறுகலிலிருந்து திருத்திக்கொள்ள வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!