India
வெள்ளிக் கொலுசுக்கு ஆசைப்பட்டு பெண்ணின் காலை வெட்டிய திருடன்: ராஜஸ்தானில் அதிர்ச்சி!
ராஜஸ்தான் மாநிலம், சார்புஜா கிராமத்தைச் சேர்ந்தவர் கன்குபாய். இவர் கடந்த திங்களன்று வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் தனது கணவருக்காக உணவு எடுத்துக் கொண்டு வந்தார். பின்னர்,உணவு கொடுத்து வீட்டு வீட்டிற்குத் திரும்பினார்.
இதையடுத்து வேலைகளை முடித்து விட்டு அந்த பெண்ணின் கணவர் வீட்டிற்குச் சென்ற போது அவரது மனைவி காணவில்லை. இது குறித்து குழந்தையிடம் கேட்டுள்ளார். இதற்குக் குழந்தைகள் காலையில் சென்ற அம்மா பிறகு வீட்டிற்கு வரவில்லை என கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கம் விசாரித்துள்ளார். எங்கு தேடியும் அவர் கிடைக்காதை அடுத்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது காட்டுப்பகுதியில் கால்கள் வெட்டப்பட்ட ஒரு பெண்ணின் சடலம் கிடைப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. பிறகு அங்குச் சென்ற போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இவர் குறித்து விசாரணை நடத்தியதில் காணாமல் போன பெண் என்பது தெரியவந்தது.
அதேபோல், அந்த பெண் காலில் அணிந்திருந்த வெள்ளிக் கொலுசுக்காக அவரது காலை வெட்டி கொலை செய்யப்பட்டம் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி - பதில் சொல்லாத மோடி : முரசொலி!
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!