India
பென்ஸ் கார் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம்; கட்டிய மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கணவர் - பஞ்சாபில் கொடூரம்
பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. 2003ம் ஆண்டே மேட்ரிமோனி மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் கொடுமைப்படுத்தியவருக்கும் திருமண நடந்திருக்கிறது. இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகளும் இருக்கின்றனர்.
திருமணமானது முதலே கணவரும் அவரது பெற்றோரும் தொடர்ந்து வரதட்சணை கேட்டு அப்பெண்ணை துன்புறுத்தி வந்திருக்கின்றனர். இருப்பினும் பெண்ணின் பெற்றோர் தங்கம், வெள்ளி போன்றவற்றை கொடுத்திருக்கின்றனர்.
ஆனாலும் S-clas மெர்சிடிஸ் பென்ஸ் காரும் வேண்டும் என கணவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்திருக்கிறார். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் மனைவியையும் 2 மகன்களையும் வெளியேற்றியிருக்கிறார்.
இதனையடுத்து சமாதானம் பேசச் சென்றபோது 50 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என மீண்டும் நிர்பந்திருக்கிறார். அதற்கும் அந்த பெண் மறுத்ததால் அவரது துப்பாட்டாவால் நெரித்து அறையில் அடைத்து வைத்திருக்கிறார்.
தொடர்ந்து அவரை கணவரின் பெற்றோர் துன்புறுத்தியதோடு, உறவினர்களுடன் கூட்டு சேர்ந்த கட்டிய மனைவியையே கணவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதனால் சுயநினைவை இழந்த அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இதனிடையே பெண்ணை கொடுமைப்படுத்திய கணவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விரைவில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உதவி காவல் ஆய்வாளர் அம்ரித்பால் சிங் தெரிவித்துள்ளார்.
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !