India
சிகிச்சைக்குப் பணம் கொடுக்க மறுத்த தந்தை.. விரக்தியில் விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவர்!
தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தவர் சாய்குமார். இவர் கல்லூரியில் பணியாற்றுபவரின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார்.
அப்போது விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இதில் இருசக்கர வாகனம் சேதடைந்துள்ளது. மேலும் வாகனம் மோதியதில் இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் காயமடைந்தவர்கள் சாய்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் நடந்த சம்பவத்தை சாய்குமார் தந்தையிடம் கூறி இருசக்கர வாகனத்தை சரி செய்யவும், காயமடைந்த இளைஞர்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் பணம் கொடுக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.
அப்போது அவரது தந்தை பணம் கொடுக்க முடியாது எனக் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த சாய்குமார் என்ன செய்வது என்று தெரியாமல் கல்லூரியின் மூன்றாவது தளத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!