India
“3 அடுக்குமாடி வீட்டை ரிக்சா ஓட்டுனருக்கு எழுதி வைத்த மூதாட்டி” : ஒடிசாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
ஒடிசா மாநிலம், தாஹத் பகுதியைச் சேர்ந்தவர் மினாடி பட்னாயக். மூதாட்டியான இவரது கணவர் குருஷ்ண குமார் பட்னாயக் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்குள் மூதாட்டியின் மகளும் இந்தாண்டு ஜனவரி மாதம் மாரடைப்பால் காலமானார்.
இதனால் மூதாட்டி தனியாக வசித்து வந்தார். மேலும் இவரது உறவினர்கள் யாரும் இவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. ஆனால், மூதாட்டியின் கணவருக்காக 25 ஆண்டுகளாக ரிக்சா ஓட்டிவந்த புத்தா சமால் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே அவரை கவனித்துக் கொண்டு வந்தனர். இதனால் இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என மூதாட்டி நினைத்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், எந்தவிதமான உதவிகளையும் எதிர்பார்க்காமல் கவனித்துக் கொண்டு வந்த ரிக்சா ஓட்டுநர் புத்தா சாமலின் குடும்பத்திற்கு மூன்று அடுக்கு மாடிக்கொண்ட வீடு, நகைகள் என அனைத்து சொத்துக்களையும் இவர்களின் பெயருக்கு உயில் எழுதியுள்ளார்.
இதைப்பார்த்து ரிக்கா ஓட்டுநரின் குடும்பத்தினர் நெகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் 'இப்படி ஒன்று நடக்கும் என்று நாங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. நாங்கள் எப்போதும் போல் மினாட்டியை நன்றாகப் பார்த்துக்கொள்வோம்' என அந்தக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சொத்துக்காகச் சொந்த பெற்றோர்களையே கொலை போன்ற கொடூர சம்பவங்கள் நடக்கும் நிலையில், தனது மொத்த சொத்துக்களையும் மூதாட்டி ரிக்சா ஓட்டுநருக்கு எழுதிவைத்த சம்பவம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!