India
“பசுவின் கோமியம், சாணம்தான் இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்தும்” : சிவராஜ் சிங் சவுகானின் சர்ச்சை பேச்சு!
இந்திய கால்நடைப் பராமரிப்பு கூட்டமைப்பு சார்பில் போபால் நகரில் நேற்று மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் ரூபாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது அந்த நிகழ்வில் பேசிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், "பசுவின் கோமியம், சாணத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தையும், தனிநபரின் வருமானத்தையும் வலுப்படுத்த முடியும்.
மேலும் உடல்கள் எரியூட்டும் இடங்களில் கூட விறகுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட வரட்டிகளைப் பயன்படுத்தலாம். இப்படிச் செய்தால் மரக்கட்கைளின் பயன்பாடும் குறைவாகவே இருக்கும்.
மத்திய பிரதேச மாநிலத்தில் கூட இரண்டு பசு காப்பகங்கள் மற்றும் பராமரிப்பு இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி மத்திய பிரேத அரசு மட்டும் தனித்துச் செயல்படுத்த முடியாது. சமூகத்தின் பங்களிப்பும் அவசியமானது.
மேலும், சிறு விவசாயிகள், கால்நடை உரிமையாளர்களுக்கு எவ்வாறு கால்நடை வளர்ப்பு லாபமான தொழிலாக மாற்ற முடியும் என்பது குறித்து மருத்துவர்களும், வல்லுநர்களும் தீர்வுகாண வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
"எப்படி ஒரு முதல்வராகல் இப்படிய எல்லாம் யோசிக்க முடிகிறது" என இணையத்தில் பலரும் சிவராஜ் சிங் சவுகானின் இந்த பேச்சை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!