India
"ரூ.4 லட்சம் கோடியைப் பிரித்துக் கொடுக்க வேண்டும்": மோடி அரசுக்கு மம்தா கிடுக்குப்பிடி!
இந்தியாவில் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்ததிலிருந்தே பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வலியுறுத்தி வந்தனர். ஆனால் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு குறைக்கவில்லை.
அண்மையில் நடைபெற்ற 13 மாநில இடைத்தேர்தலில் பா.ஜ.க படுதோல்வியடைந்தை அடுத்து, அடுத்து நடைபெறவிருக்கும் 5 மாநில தேர்தலை கருத்தில் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய பா.ஜ.க அரசு குறைத்துள்ளது.
இருந்தபோதும் பெட்ரோல் 100 ரூபாய்க்கு அதிகமாகவே அனைத்து மாநிலங்களிலும் விற்கப்பட்டு வருகிறது.மேலும் பா.ஜ.க தலைவர்கள் அனைத்து மாநில முதல்வர்களும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வினால் கிடைத்துள்ள ரூ.4 கோடியை மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு புதிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இது குறித்து நேற்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசுகையில், "ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்ரேவை தேர்தலை கருத்தில் கொண்டே பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்துள்ளது.
பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு வரியின் மூலம் கிடைத்த ரூ. 4 லட்சம் கோடியை ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும். வாட் வரியைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.அப்படி என்றால் மாநிலங்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கும்? . நிதி நெருக்கடிகள் இருந்தபோதிலும், மாநிலங்கள் பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி வருகிறது. தேர்தல் நெருங்கும் போது விலையைக் குறைக்கிறார்கள். பின்னர் மீண்டும் விலையை உயர்த்துகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !
-
பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!