India

“இதுபோல் சித்திரவதை இனி மேல் யாருக்கும் நடக்கக்கூடாது” : தற்கொலை செய்து கொண்ட பெண் காவலரின் பகீர் கடிதம்!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வசாய் பகுதியைச் சேர்ந்தவர் தீபாலி கதம். இவர் காவலராக பணியாற்றி வந்தார். அதேபோல் நாலாசோபாரா காவல்நிலையத்தில் காவலராக இருப்பவர் வால்மீகி அஹிரே. இவர்கள் இருவரும் சில ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும் வால்மீகி தொடர்ந்து தீபாலியை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்து வந்துள்ளார். இதனால் தீபாலிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீபாலிக்கு இந்தமாதம் 16ம் தேதி பெற்றோர்கள் திருமண ஏற்பாடு செய்திருந்தனர். இதனை அறிந்த போலிஸார் வால்மீகி மணமகன் மயூரை நேரில் சந்தித்துள்ளார். அப்போது, "தீபாலியை திருமணம் செய்ய வேண்டாம். நான் சொல்வதைத்தான் அவர் கேட்பார். நீங்கள் திருமணம் செய்தாலும் நான் சொன்னால் என்னுடன் வந்துவிடுவார்" என தெரிவித்துள்ளார்.

இதனால் மணமகன் மயூர் திருமணத்தை நிறுத்தியுள்ளார். திருமணம் நின்றதால் தீபாலி சில நாட்களாக மன வருத்தத்திலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு படுக்கச் சென்ற தீபாலி இன்று காலை வெகு நேரமாகியும் தீபாலி வெளியே வரவில்லை.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் அறைக் கதவைத் தட்டிப்பார்த்தனர். ஆனால் அவர் கதவைத் திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது தீபாலி துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தது.

இது குறித்து அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து தீபாலி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விசாரணை நடத்தியதில் தற்கொலைக்கு முன்பு தீபாலி தனது சகோதரருக்குக் கடிதம் எழுதி அதை வாட்ஸ் ஆப்பில் அனுப்பியுள்ளார்.

அதில்,வால்மீகி அஹிரே மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் என்னைச் சித்திரவதை செய்துள்ளார். என்னால் என் குடும்பம் பாதிக்கப்படுகிறது எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன். வால்மீகியை விட்டுவிடாதீர்கள். இது போன்று வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தலைமறைவாக உள்ள வால்மீகி அஹிரே போலிஸார் தேடி வருகின்றனர்.

Also Read: “இந்திய எல்லைகளில் 100க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டிய சீனா?” : அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!